Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் அரசியலில் நிற்கலாம்..! கி.வீரமணி கருத்து

'18 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலில் நிற்கலாம்' என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 

கி.வீரமணி

திருச்சியிலுள்ள பெரியார் மருந்தியல் கல்லூரியின் 35-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மாணவ மாணவியருக்குப் பட்டங்களை வழங்கினார். 

அதன் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், 'விவசாயிகளைப் பட்டினி போட்டுவிட்டு, முதலமைச்சரும் அமைச்சர்களும் நீராட புஷ்கரத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டது மூட நம்பிக்கை வியாபாரம். முன்னுக்குப் பின் முரணாக மாற்றி மாற்றிப் பேசும் தமிழக அமைச்சர்கள், உண்மை கண்டறியும் கருவியை வைத்து சோதிக்கப்பட வேண்டும். அதை, ஆளுநர் உடனடியாகச் செய்ய வேண்டும். நீட் தேர்வு முழுமையாக ரத்துசெய்யப்படும் வரை போராட்டங்கள் தொடரும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலில் நிற்கலாம். ஆனால், பைத்தியம் பிடிக்காதவர்கள் கட்சி தொடங்கலாம். கறுப்புக்குள் காவி என்று கூறியதன்மூலம் கமல்ஹாசன் பயங்கர குழப்பத்தில் இருப்பது தெளிவாகியுள்ளது' என்று தெரிவித்தார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close