Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உறுதிமொழி எடுத்துக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்..!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் மதுரையில் நடந்தன. மீனாட்சியம்மன் திருக்கோயில் அருகே, தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட பாரம்பர்ய விழிப்புஉணர்வு நடைப்பயணத்தை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் இன்று தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், ’உலக சுற்றுலா அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் 1970-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் 150 நாடுகள் உள்ளன. இந்த அமைப்பு, செப்டம்பர் 27-ம் நாளை உலக சுற்றுலா தினமாக அறிவித்துள்ளது.

உலகசுற்றுலா

சுற்றுலா தினம் கொண்டாடப்படுவதால் சமூக, மொழி, கலாசார நல்லிணக்கத்துக்கு வழிவகுப்பதோடு, ஒரு நாட்டுக்கு அந்நியச்  செலாவணியை ஈட்டித்தந்து, பொருளாதாரம் மேம்படுவதற்கு வழிவகைசெய்கிறது. வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  ‘நிலையான சுற்றுலா – வளர்ச்சிக்கு ஒரு காரணி’ என்ற கருத்தை இந்த ஆண்டு உலக சுற்றுலா அமைப்பு அறிவித்துள்ளது என்றார். அதைத் தொடர்ந்து, ஆட்சியர் தலைமையில் திருமலைநாயக்கர் மஹாலில் 'தூய்மையே சேவை' உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் உறுதிமொழி எடுத்துக்கொண்டது, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீபாலமுருகன் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close