Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கன்னியாகுமரியில் நிதி நிறுவனம் நடத்தி 2,000 கோடி ரூபாய் மோசடி..! பொதுமக்கள் கண்ணீர்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த பளுகல் பகுதியில், நிர்மல் கிருஷ்ணா நிதி லிட், பளுகல் கிருஷ்ணா சிட்ஸ் (பி) லிட் மற்றும் நிர்மல் கிருஷ்ணா சிட்ஸ் (பி) லிட் என்ற நிதி நிறுவனங்களை நிர்மலன் என்பவர் நடத்திவந்தார். முதலீடுசெய்த பணத்துக்கு அதிக வட்டி தருவதாகக் கூறியதால் குமரி, கேரள எல்லைப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பணத்தை முதலீடு செய்தனர். சுமார் ரூ.2,000 கோடி முதலீடு குவிந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைக் கொடுக்காமல் நிர்மலன் தலைமறைவானார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், குமரி மாவட்ட எஸ்.பி-யிடமும் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்திருந்தனர்.

நேற்று முன்தினம், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். நிர்மலன் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் உட்பட மொத்தம் 18 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு, தனிப்படையினர் தேடிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே, நிர்மலன் சிட் ஃபண்ட் உள்ளிட்ட  பல்வேறு பெயர்களில் நிதி நிறுவனம் நடத்தி, சுமார்  2,500 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை, சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்கள், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரையைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பின்னர், சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் கொறடாவுமான விஜயதரணி செய்தியாளர்களிடம் பேசும்போது, 'நிதி நிறுவனம் மோசடி தொடர்பான நடவடிக்கைகளைத் தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகளும், மத்திய அரசும் நேரடியாகத் தலையிட்டு துரிதப்படுத்த வேண்டும். தனிப்படை அமைத்து நிதி நிறுவன நிர்மல் கிருஷ்ணாவைக் கைதுசெய்து, அசையும் அசையா சொத்துகளையும் பறிமுதல்செய்து முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசும் உடனடியாக இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவ மாணவிகளை ஈடுபடுத்துவது தவறு எனச் சுட்டிக்காட்டி, விழாவுக்கு பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து வர தடை விதித்து  நீதிமன்றம் உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, பதவி சுகத்துக்காக அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கட்சிக்குள் குழப்பம் வந்த பின்னர் மாறுபட்ட மற்றும் எதிரான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர், அப்போது பதவியில் இருந்தவர்கள்தான் இப்போதும் பதவியில் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், தங்கள் பதவிகளைத் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்துவிட்டு, விசாரணையைச் சந்திக்க வேண்டும்' என்று தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close