Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பி.எட் படிப்புக்கு, களப் பயிற்சிகுறித்த கல்வித்துறை அறிவிப்பு

 

பி. எட்

பி.எட் படிப்பின்போது, பள்ளிக்குச் சென்று, மாணவர்களுக்குப் பாடம் நடத்தி, களப் பயிற்சிப் பெற வேண்டும். தற்போது 'டிப்ளோமா' ஆசிரியர் கல்வியில் படிப்பு முடித்தவர்கள், அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றிவருகின்றனர். அவர்களில் பலர், தங்களின் பதவி உயர்வுக்காக மேலே படிக்கின்றனர். (பணியில் இருக்கும் ஆசிரியர்கள், பல்கலைத் தொலைநிலைக் கல்வியில் பி.எட் படிக்க அனுமதியுள்ளது.) அதோடு, பி.எட் படிப்பை தொலைநிலைக் கல்வியில் படிக்கும் ஆசிரியர்களும் பள்ளியில் பயிற்சி பெற வேண்டியது கட்டாயம். அதற்காக, பலர் வெகு தொலைவில் உள்ள பள்ளிகளுக்குச் செல்லவேண்டியதிருந்தது. இந்த நிலையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனப் பலரும் கோரிவந்தனர்.

அந்த வகையில், பி.எட் படிக்கும் ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றும் பள்ளியிலேயே களப் பயிற்சி பெறலாம் எனக் கல்வித்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். இந்த அனுமதிக்கு, ஆசிரியர் தரப்பில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், ஆசிரியர்கள் களப்பயிற்சிக்கு என ஏற்படும் அலைச்சலிலிருந்து விடுபடலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close