Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரி மருத்துவ சீட் முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் - பா.ஜ.க மோதல்

புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகள் மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

puducherry

 

புதுச்சேரியில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக ஆளுநர் மாளிகை அளித்த புகாரையடுத்து, கடந்த ஜூன் மாதம் சென்டாக் அலுவலகத்தில் அதிரடி சோதனையை மேற்கொண்டது சி.பி.ஐ. அதன் எதிரொலியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான சென்டாக் ஒருங்கிணைப்பாளர் நரேந்திரகுமார், முன்னாள் சுகாதாரத்துறைச் செயலாளர் பி.ஆர்.பாபு மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ராமன் உள்ளிட்ட சென்டாக் அதிகாரிகள் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகிகள் உள்பட13 பேர் மீது கடந்த 18-ம் தேதி சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு விவகாரத்தில் முதல்வர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் ஆகியோர் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரி மாநில பா.ஜ.க சார்பில் சட்டமன்றம் அருகே இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பா.ஜ.க மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். முதல்வர் நாராயணசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து புகார் அளித்திருப்பதாகவும் பா.ஜ.க மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்தார்.

puducherry
 

இதன் எதிரொலியாக, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மீது தொடர்ந்து பொய்யான அவதூறு குற்றச்சாட்டுகளை பா.ஜ.க-வினர் பரப்பி வருவதாகவும், அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்திருக்கின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close