Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஐடி கார்டு இல்லை என்றாலும் வழக்கில் சரணடைவதை ஏற்க வேண்டும்!' - உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆனந்த் என்பவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர். இந்நிலையில் இவர் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அம்மனுவில் " ஆள்கடத்தல் வழக்கொன்றில் நான் உட்பட மூன்று நபர்கள்மீது தேவக்கோட்டை சிட்டி போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் நான், கெளதம், மதுபாலா ஆகிய மூவரும் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பாக சரணடைந்தோம். கௌதம் மற்றும் மதி சரணடைந்ததை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் அடையாள அட்டை இல்லாத காரணத்தால், நான் சரணடைந்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன்,மாஜிஸ்திரேட்  நேரில் ஆஜராகி, இது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டார். மாஜிஸ்திரேட், நேரில் ஆஜரான நிலையில், அவரிடம் சரணடைந்தவரை ஏற்காதது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு சரியான அடையாள அட்டை ஏதும் இல்லை என்பதால், ஏற்கவில்லை என மாஜிஸ்திரேட் பதிலளித்தார். அதற்கு சரணடைய வருபவர் அனைத்து ஆவணங்களையும் எடுத்து வர இயலாது. முதலில் சரணடைந்ததை ஏற்றுக்கொண்டு பின்னர் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி,  அடையாள அட்டை ஏதுமின்றி, ஆனந்த சரணடைந்ததை ஏற்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.           

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close