Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வைகையை சுத்தம்செய்ய கலெக்டருடன் களத்தில் இறங்கிய மக்கள்!

வைகை

மதுரையின்  முக்கிய அடையாளமாக வைகை நதியும் இருக்கிறது. ஆனால், தற்போது வைகையின் நிலையோ சீர்கெட்டுப் போய்கிடக்கிறது. கழிவுநீர் கால்வாய்கள், கோழிக்கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் போன்றவற்றால் மாசடைந்து கிடக்கிறது வைகை.
363 இடங்களில் உள்ள  கட்டடங்களில் இருந்து கழிவுகள் வைகை ஆற்றில் கலப்பதாக மாநகராட்சி சார்பாக உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது . இதில் கபடிப் போட்டி நடத்துவது, கார்பார்கிங் வசதி செய்துகொள்வதென்று பலரும் நதியை ஆக்கிரமித்து கொண்டு பல சீர்கேடுகளை செய்துவந்தனர். இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர், அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் என்று அனைத்து தரப்பினரும் இன்று வைகை ஆற்றை சுத்தம் செய்ய களம் இறங்கினர்.

''என்னதான் சுத்தம் செய்தாலும் வைகையைச் சுற்றியுள்ள பொதுமக்களும், வியாபாரிகளும் சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லை என்றால் வைகையைக் காப்பாற்ற முடியாது'' என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close