Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சி விமான நிலையத்தில் வேலை என வரும் தகவல் வதந்தி: போலீஸ் அறிவிப்பு

திருச்சி விமான நிலையத்தில் வேலை என வரும் தகவல் வதந்தி என  திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண்  தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் திருச்சி விமான நிலையத்தில் மேற்பார்வையாளர், பண்டக காப்பாளர், உதவி மேலாளர், வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி, தள மேலாளர் மற்றும் விமான பணிப்பெண் பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு கடைநிலை ஊழியர் பணியும் மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் சில செல்போன்  எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவதாகவும், அந்த தகவல்கள் போலியானவை என திருச்சி மாநகர காவல் ஆணையர்  அருண் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக திருச்சி விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, வேலைவாய்ப்பு என்பது விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே எடுக்கப்படும் என்றும், அதுவும் நடப்பு ஆண்டில் காலிப் பணியிடங்கள் இல்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். எனவே, விமான நிலையத்தில் வேலை வாய்ப்புள்ளது என வந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை என்றும், இதுதொடர்பான விசாரணையில் மேற்படி செல்போன் எண்கள் டெல்லியில் பயன்படுத்தப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்க, திருச்சி மாநகர காவல்துறை துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும்,  பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் யாரும் இதுபோன்ற சமூக வலைதளங்களில் கொடுக்கப்படும் தவறான செய்திகளை நம்பி மேற்படி செல்போன் எண்களையோ அல்லது வேறு ஏதேனும் செல்போன் எண்களையோ தொடர்புகொண்டு ஏமாற வேண்டாம் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close