Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடவுப் பாடலோடு தொடங்கிய விவசாயம்..! சிவகங்கை விவசாயிகள் உற்சாகம்

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்துவந்ததை அடுத்து, கண்மாய், குளங்கள் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தொடர்ந்து சில நாள்களாக மழைபெய்து வருவதால் விவசாயிகள் வயலை, சீா் செய்தல், விதைப்பு பணி, நடவுப் பணி என விவசாயப்பணிகளில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளனா்.

சிவகங்கை அருகே உள்ள சோழபுரம், நாலுகோட்டைப் பகுதிகளில் விவசாயிகள் நெற்பயிரை நடவு செய்யும் பணியில் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனா். முன்னதாக நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் ஊா் கோயிலில் மதுக்குடம் சுமந்து வேண்டுதல் வைத்த விவசாயிகள், சமீபத்தில் பெய்த மழையால் கண்மாய், குளங்ளில் நீா்மட்டம் உயா்ந்ததை அடுத்து வயலை, சீா் செய்தல், விதைப்புப் பணி மற்றும் நடவுப் பணியி்ல் ஈடுபட்டு வருகின்றனா். தொடர்ந்து மழை பெய்யும் என்ற நம்பிக்கையில், பயிர் நடவு செய்ய 1 ஏக்கருக்கு 2,500 ரூபாய் கூலி கொடுத்து நெல் விவசாயத்தைத் தொடங்கியுள்ளனா். நடவு செய்ய குழுக்களாக ஈடுபடும் பெண்கள் களைப்பு அடையாமல், இருக்க பாரம்பர்யப்படி நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி உற்சாகமாக நடவு செய்து வருகின்றனா். நாட்டுப்புற மக்கள் வாழ்வியலில் பெரும்பங்கு கொண்டு விளங்கும் நாட்டுப்புறப் பாடல்கள், கிராமப்புற மக்களால் வேலை செய்யும்போது களைப்பு தெரியாமல் இருக்கவும், மனமகிழ்ச்சிக்காகவும் பாடப்படும்,

 பெண்களின் நடவுப் பாடல்கள் சோழபுரம், நாலுகோட்டை வயல்வெளிகளில் அனைவரது காதுகளிலும் ரீங்காரம் ஈட்டுக்கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close