Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தசரா ஊர்வலம் செல்ல இந்து மக்கள் கட்சியினர் கைது..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தசரா ஊர்வலம் செல்ல போலீஸ் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து ஊர்வலம் செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் சலசலப்பை உருவாக்கி உள்ளது. சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழா தொடர்ச்சியாக நடைபெறுகிறது. அதையொட்டி குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்குப் பல வகையான நேர்ச்சைக்குரிய வேடம் அணிந்த பக்தர்களுடன் இந்து மக்கள் கட்சியினர் தசரா ஊர்வலம் செல்ல போலீஸில் அனுமதி கேட்டிருந்தனர்.

ஆனால், போலீஸார் தரப்பில் அதற்கு அமைதி வழங்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து இந்து மக்கள் கட்சியினர் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலிலிருந்து தசரா வேடம் அணிந்த பக்தர்களுடன் ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். ஆனால், அவர்களை போலீஸார் ஊர்வலத்தைக் கைவிட்டுவிட்டு கலைந்து செல்லும்படி கூறினார்கள். அதைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கும் போலீஸாருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் நடந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  அதைத் தொடர்ந்து போலீஸார் ஊர்வலம் செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 15 பேரைக் கைது செய்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close