Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆயுத பூஜையை முன்னிட்டு தோவாளை பூ மார்க்கெட்டில் அமோக விற்பனை

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் புகழ் பெற்ற பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தோவாளை, மிகப் பெரிய பூ மார்க்கெட்டாக இருந்து வருகிறது. இங்கு ஓசூர், பெங்களூர், சேலம், திண்டுக்கல்லிலிருந்தும் பலதரப்பட்ட பூக்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.

தோவாளையிலிருந்து பூக்கள் வெளி நாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பண்டிகைக் காலங்களில் தோவாளை பூ மார்க்கெட்டில் விற்பனை அமோகமாக இருக்கும். ஆயூத பூஜையை முன்னிட்டு தோவாளை பூ மார்க்கெட்டில் கடந்த இரண்டு நாள்களாக பூக்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. பூஜைக்கும், கோவிலுக்கும் பூக்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பூக்களை வாங்குவதற்கு தென் மாவட்டங்களின் முக்கிய பூ மார்க்கெட்டான தோவாளையில் வியாபாரிகள் குவிந்துள்ளனர். அதனால் பூக்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. தோவாளை மார்க்கெட்டில் புதிய ரக பூக்களும் விற்பனைக்கு வந்திருக்கிறது. பல வண்ண கலரினால் ஆன இந்தப் பூக்களை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.

காலை முதல் ஏராளமான வியாபாரிகள் தோவாளை பூ மார்க்கெட்டில் குவிந்தனர். கேரள உள்பட வெளி மாநில வியாபாரிகளும் அதிக அளவு வந்து பூக்களைப் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர். இதனால் தோவாளை பூ மார்க்கெட்டில் ஒரே நாளில் 25 டன் பூக்கள் விற்பனையாகி உள்ளது. பல வண்ண கலர் பூக்களும் அதிகம் விற்பனை ஆனது. அதனால் பூக்களின் விலையும் அதிகமாக உயர்ந்து காணப்பட்டது. மல்லி, பிச்சிப் பூக்கள் விலை 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதுபோல இதரப் பூக்களின் விற்பனையும் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close