Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சி அரசு மருத்துவமனையில் கே.என்.நேரு ஆய்வு

 
திருச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல மாவட்ட மக்கள், நேரில் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் திருச்சி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.
 
கே.என்.நேரு
 
இந்நிலையில்  திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் கே.என் நேரு, முன்னாள் துணை மேயர் அன்பழகன், திருச்சி தி.மு.க.வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் ஆகியோருடன் திருச்சி அரசு மருத்துவமனையில்  ஆய்வு மேற்கொண்டார்.
 
அப்போது கே.என்.நேரு, டெங்குக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஆண்கள், பெண்கள் இருக்கும் தனித் தனி வார்டுகளுக்குச் சென்று, டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து நலம் விசாரித்தார். அடுத்து மருத்துவர்களிடம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என நேரு வலியுறுத்தினார்.
 
அடுத்து கே.என்.நேரு, “தமிழகம் முழுவதும் கிராமப் பகுதிகளில் அதிக அளவில் டெங்குக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவுப்படி அனைத்து மாவட்டச் செயலாளர்களும் அந்தந்த பகுதி அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்து வருகிறோம். டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் வெளியே தெரிந்தால் பிரச்னை ஏற்படும் என்பதால் தமிழக அரசு அதை மறைக்க முயற்சி செய்கிறது. வருங்காலத்தில் மேலும் டெங்கு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close