Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குலசை தசரா : வேடமணிந்த பக்தர்களுக்கு ஆட்சியரின் அறிவுரைகள்

kulasai thasara

Thoothukudi: 

பிரசித்திபெற்ற குலசை தசரா திருவிழாவில் கலந்துகொள்ளும் வேடமணிந்த பக்தர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேஷ், சில முக்கிய அறிவுரைகளையும் விதிமுறைகளையும் கூறி, அவற்றைக் கடைபிடிக்க வலியுறுத்தியுள்ளார்.

குலசை என்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர், உடனுறை ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. 10-ம் நாள், கடற்கரையில் மகிஷாசூரனை வதம்செய்யும் நிகழ்ச்சி, நாளை 30-ம் தேதி சனிக்கிழமை இரவு 12 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதிலுமிருந்து பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் குலசைக்குக் குழுக்களாக வருவார்கள். இந்த பக்தர்களுக்கு ஆட்சியர் வெங்கடேஷ் முக்கிய விதிமுறைகளையும் அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

kulasai thasara

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’குலசை கடல்பகுதி சற்று ஆழமானது என்பதால், எச்சரிக்கைத் தடுப்பைத் தாண்டி குளிக்க அனுமதி இல்லை. திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அம்மனின் பக்தர்களே. எனவே, சாதிப் பெயர் பொறிக்கப்பட்ட பனியன் அணிவதும், குழுக்களுக்கு முன்பு பேனகர்களைத் தூக்கிப் பிடித்து, இது சம்பந்தமான கோஷம் எழுப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேடமணிந்த பக்தர்கள் சூலாயுதம், அரிவாள், வாள் ஆகிய உலோகங்களால் ஆன ஆயுதங்களை எடுத்து வரக் கூடாது. அவ்வாறு எடுத்து வந்தால், காவல்துறையினர் அந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதோடு, வழக்குப் பதிவும் செய்வார்கள். பக்தர்கள் தூக்கிவரும் தீச்சட்டிகளைக் கோயில் அருகிலும் கடற்கரைக்குச் செல்லும் வழியிலும் அப்படியே போட்டுவிடுவதால், திடீர் தீ விபத்து ஏற்படவும், பிற பக்தர்களுக்குத் தீக்காயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, கடற்கரைப் பகுதியில் அதற்கென தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்தில்தான் தீச்சட்டியைப் போட வேண்டும். வேடமணிந்த பக்தர்கள், தாங்கள் வேடமணியப் பயன்படுத்திய பொருள்கள், உடைகளை கடலுக்குள் போடாமல், கடற்கரையில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில்தான் போட வேண்டும்.

kulsasi thasara

மதிப்புமிக்க நகைகளைப் பெண்கள் அணிந்தோ, குழந்தைகளுக்கு அணிவித்தோ வர வேண்டாம். கூட்ட நெரிசலில் குழந்தைகளைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். குடிநீரை குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கடற்கரையில் உணவு சாப்பிடும் பக்தர்கள், ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில்தான் இலைகளைப் போட வேண்டும். இந்த அறிவுரைகளை பக்தர்கள் தவறாமல் கடைபிடித்து ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close