Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மத்திய அரசு என்ன அந்நிய அரசா?' - சேலம் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

Salem: 

அ.தி.மு.க-வின் நிறுவனரான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. இதன் நீட்சியாக இன்று சேலத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அ.தி.மு.க அமைச்சர்கள் உட்பட அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி

அப்போது உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, 'சிலர் நான் பொதுக் கூட்டங்களில் கதை சொல்வதை விமர்சிக்கிறார்கள். அந்த விமர்சனங்களுக்காக நான் கதை சொல்வதை நிறுத்தப் போவதில்லை. திட்டங்களை நிறைவேற்றுவதற்காக என்னிடம் வரும் கோப்புகளை உடனுக்குடன் கையெழுத்திட்டு வருகிறேன். மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாகப்போவது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர். மத்திய அரசு என்ன அந்நிய அரசா? மக்கள் நலத் திட்டங்களைப் பெறவே மத்திய அரசுடன் நாங்கள் இணக்கமாக செயல்பட்டு வருகிறோம். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே மத்திய அரசுடன் இணக்கமாக போகும் போக்கு அ.தி.மு.க-வுக்கு இருந்து வருகிறது. நாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் காரணத்தால்தான் தமிழ்நாட்டுக்கு பல நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடிகிறது. சேலம் மாவட்டம் அ.தி.மு.க-வின் கோட்டை. இந்த கோட்டையை யாராலும் தகர்க்க முடியாது. அதனால்தான் இன்று நடக்கும் கூட்டத்தில் மாநாடு போல மக்கள் திரண்டிருக்கிறார்கள். சேலம் மாவட்ட மக்கள் மிகவும் விசுவாசமானவர்கள் என்பதை இன்று கூடிய கூட்டம் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது' என்று பேசினார்.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான தி.மு.க-வைப் பற்றி எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, 'எம்.எல்.ஏ-க்களின் கணக்கைப் பற்றி கருத்து கூறும் தி.மு.க, முந்தைய ஆட்சியில் மைனாரிட்டி அரசாக இருந்தது.  தனது குடும்பத்தினருக்கு மத்திய ஆட்சியில் பதவிகள் கேட்டு கடிதம் எழுதிய கட்சி தி.மு.க. மத்திய ஆட்சியில் பங்கு வகித்த தி.மு.க தமிழக மக்களுக்கு செய்தது என்ன?' என்று கேள்வி எழுப்பினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close