Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குலசை தசரா: சூரசம்ஹாரம் காண குவிந்துள்ள 30 லட்சம் பக்தர்கள்

kulasai soorasamharam

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் 10-ம் நாளான இன்று இரவு 12 மணிக்கு கடற்கரையில் மகிஷாசூரசம்ஹாரம் நடக்க இருக்கிறது. இதைக் காண தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் குலசையில் குவிந்துள்ளனர்.

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசை என்றழைக்கப்படும் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ’மகிஷா சூரசம்ஹாரம்’ இரவு 12 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது. இதை முன்னிட்டு இரவு 11 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து அம்பாள் சிம்ம வாகனத்தில் மகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளி கடற்கரைக்குச் சென்று, அங்கு மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. சூரசம்ஹாரம் முடிந்ததும் கடற்கரை மேடையில் சிறப்பு பூஜையும் நடக்கிறது. நாளை காலை அக்டோபர் 1-ம் தேதி 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் வீதியுலா வருதலும் காப்பு களைதலும் நடக்கிறது. இத்துடன் தசரா திருவிழா நிறைவுபெறுகிறது.

devotees in kulasaikadarkarai

விரதம் இருந்த பக்தர்கள், பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் காப்புகளைதலுக்குப் பின் கோயிலிலிருந்து அவரவர் ஊர்களுக்குப் புறப்படுவார்கள். நாளை ஞாயிற்றுக்கிழமை கோயில் வளாகத்தில் காலை முதல் இரவு வரை பக்தர்களுக்குத் தொடர் அன்னதானமும் நடக்கிறது. சூரசம்ஹாரத்தைக் காண சுமார் 20 லட்சம் பக்தர்கள் குலசையில் கூடியுள்ளனர். தசரா திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் திங்கட்கிழமை வரை நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் மதுரை ஆகிய  பகுதிகளில் இருந்து குலசைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி மகேந்திரனின் உத்தரவுப்படி, 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் கோவில் வளாகம், கடற்கரைக்குச் செல்லும் வழி, கடற்கரைப்பகுதி, வாகன நிறுத்தங்கள், சாலை சந்திப்புகள் என 100 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close