Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை காலமானார்!

பி.ஜே.பி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை ஹரிஹரன் சென்னையில் இன்று காலமானார்.

எச்.ராஜா

 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.எட் வகுப்பு பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சிறந்த யோகா பயிற்சியாளர். பிரமிடு போல் செட் செய்து அதற்குள் அமர்ந்து மணிகணக்கில் யோகா செய்வார். வசதியான குடும்பமாக இருந்தாலும் சைக்கிளில் தான் உலா வருவார். தன்னுடைய வேலைகளை தானே செய்து வந்தாராம். தனியாக சமையல் செய்வது,வீட்டு வேலைகளை செய்வது என கிட்டத்தட்ட மொராஜிதேசாயி போன்று வாழ்ந்தார் என்கிறார்கள் காரைக்குடியில் வசிக்கும் மக்கள். பி.ஜே.பி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தந்தை உடல்நலக் குறைபாடு காரணமாக சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர், சிகிச்சைப் பலனின்றி காலமானார். சென்னை தி.நகர் தோஷி கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் வரக் கொண்டு வரப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளைச் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதிச் சடங்குகள் அவரின் சொந்த ஊரான காரைக்குடி சுப்ரமணியபுரம் 9-வது வீதியில் 1/10/17 மாலை 4:30 மணியளவில் நடைபெறும். அதில் பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் நாளை பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close