Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தசரா விழாவில் பா.ஜ.கவை தாக்கிப் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தக்கரே

Chennai: 

தசரா விழாவின் இறுதி நாளான நேற்று பேசிய சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசபக்தி பற்றி எங்களுக்கு யாரும் கற்றுக்கொடுக்கத் தேவையில்லை எனப் பா.ஜ.க.வைத் தாக்கிப் பேசினார். 

சிவசேனா உத்தவ் தக்கரே

பா.ஜ.க.வின் நீண்ட நாள் கூட்டணிக் கட்சியான சிவசேனா தற்போது பா.ஜ.க.வின் செயல்பாடுகளைத் விமர்சனம் செய்யத் துவங்கியுள்ளது. இதனால் மத்தியிலும், மகாராஷ்டிர மாநிலத்திலும் பா.ஜ.கவினுடைய கூட்டணியிலிருந்து விலகலாம் என்ற பேச்சும் இருந்து வருகிறது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற தசராவின் இறுதி நாளான நேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தக்கரே பா.ஜ.கவை தாக்கிப் பேசியுள்ளார். மேலும், "தேசபக்தி பற்றிப் பா.ஜ.க. எங்களுக்குக் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. தேசபக்தியைக் கற்றுக்கொள்ள வேண்டிய நாள் இன்னும் வரவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் தேசபக்தர்கள் என்றும், எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் போன்றும் ஒரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. சிவ சேனா கட்சியினர் போராட்டங்களை நடத்தும்போது பிரதமர் நரேந்திர மோடியைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். சீரான வரிவிதிப்புக்காக ஜி.எஸ்.டி. வரியைக் கொண்டு வந்ததாக மத்திய அரசு கூறுகிறது. எங்கே சீரான வரி இருக்கிறது? பாகிஸ்தானில் இந்தியாவைவிடக் குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்கிறது" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close