Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எந்தக் காய்ச்சலாக இருந்தாலும் அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

எந்தக் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும் எனக் கூறியுள்ளார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் .

அமைச்சர் விஜயபாஸ்கர் ​​​​​​ திருச்சி, மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையில், அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மாவட்ட கலெக்டர் இராசாமணி, மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல் ஆகியோர் சகிதமாக வந்த அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது அவர்கள், பல்வேறு காய்ச்சல்களால் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து, மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து விசாரித்தனர். அவருக்கு திருச்சி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். அனிதா மற்றும் மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் மருத்துவமனை விவரங்களை விவரித்தார்கள். அப்போது, மருத்துவமனையில், சுகாதார குறைபாடு உள்ள இடங்களைப் பார்த்து பதறிய அமைச்சர் விஜயபாஸ்கர், இதற்குக் காரணமான பணியில் அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் இருந்த தனியார் ஒப்பந்த ஊழியர்கள் மூன்று பேரை பணிநீக்கம் செய்தார்.

இறுதியாகப் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,

“தமிழ்நாட்டில் டெங்கு கொசுகளை ஒழிக்கத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் எந்தவகை காய்ச்சலாக இருந்தாலும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி உடனடியாக தீர்வு காண வேண்டும். அரசு மருத்துவமனைகளில் இரத்த பரிசோதனை முற்றிலும் இலவசமாகச் செய்யப்படுகிறது. இரத்த பரிசோனைகள் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக 40 வினாடியில் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்கள் எவ்வகை காய்ச்சல் என்பதை எளிதாக அறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள முடியும். காய்ச்சல் நேரத்தில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் மருந்து மாத்திரைகள் உட்கொள்ளக் கூடாது. காய்ச்சலை ஆரம்பக் காலத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சையினை மேற்கொள்ள அரசு சார்பில் அரசு மருத்துவமனைகளில் அனைத்து போதிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முற்றிலும் இலவசமாக 24 மணி நேரமும் அரசு மருத்துவமனைகளை எளிய முறையில் அணுகலாம்.

தமிழகம் முழுவதும் உள்ள 303 அரசு மருத்துவமனைகளுக்கு, 837 இரத்த சோதனை கருவியானது ரூபாய் 23 கோடியே 50 இலட்சம் செலவில் வழங்கப்பட்டுள்ளது. டெங்கு இருக்கும் பட்சத்தில் நாளொன்றுக்கு இரு முறை இரத்த சோதனை எடுக்க வேண்டும். இந்த இரத்த சோதனை செய்வதற்குத் தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவு நேரிடும். ஆனால் இப்பரிசோதனை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகச் செய்யப்படுகிறது.

பொதுமக்கள் தங்களது வீட்டிலோ வீட்டின் சுற்றுப்புறத்திலோ டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள் போன்ற வீணான பொருட்கள் கிடந்தால் உடனே அகற்றி விடவேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் குடங்கள், சிமென்ட் தொட்டிகள், டிரம்கள் ஆகியவற்றைக் கொசு புகாதவண்ணம் மூடி வைக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை வாரம் ஒரு முறை தேய்த்துக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏடிஸ் கொசுப்புழு வளராமல் தடுக்கலாம். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொண்டு உரியச் சிகிச்சைகளை விரைவாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 179 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

திருச்சி,சென்னை, சேலம் மாவட்டங்களில் பரவும் டெங்கு காய்ச்சலை ஒழிப்பது சவாலாக உள்ளது என சில தினங்களுக்கு முன் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்ததும், தற்போதைய அவரது விசிட்டும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close