Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குமரி மாவட்டத்தில் போதை பொருள்கள் விற்ற 36 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீஸார்  நடத்திய சோதனையில் பண்டல் பண்டலாக புகையிலை பொருள்கள், போதை பாக்குகள், மது பாட்டில்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 36 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை  மற்றும் போதை பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாகவும், அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து. குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானம், புகையிலை, போதை பாக்குகள் விற்பனை செய்யபவர்கள் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. துரை உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில்  கடையல், மயிலாடி, மார்த்தாண்டம், கொல்லங்கோடு, அருமனை, குளச்சல், தக்கலை, நித்திரவிளை போன்ற பல்வேறு இடங்களில் அந்ததந்த காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் போலீஸார் சோதனை செய்தனர்.அப்போது குமரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை, போதை பாக்குகள், மதுபானம் விற்றதாக 36  நபர்களை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் போதை பொருள்கள் விற்பவர்களை கலக்கமடையச் செய்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close