Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பயணிகளைத் தவிக்கவிட்ட ஸ்பெஷல் ரயில்!

தொடர்விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்றிருந்தனர். நாளை முதல் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படவுள்ளன. இதனால் ரயில், பஸ்களில் கடும் கூட்டம் அலைமோதின. பயணிகள் நலன்கருதி சிறப்பு ரயில், பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

ரயில்

தெற்கு ரயில்வே தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயிலை இன்று காலை 6 மணிக்கு இயக்குவதாக அறிவித்திருந்தது. அந்த ரயிலில் பயணிக்க மக்கள் முன்பதிவு செய்திருந்தனர்.  செங்கோட்டை செல்லும் சிறப்பு ரயிலுக்காக 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இன்று காலை தாம்பரம் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் ரயில் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக சென்றுவிட்ட தகவல் பயணிகளுக்குத் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாத்த்தில் ஈடுபட்டனர். பயணிகளை போலீஸார் சமரசப்படுத்தினர். டிக்கெட் கட்டணத்தைத் திரும்பத் தருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதைப் பயணிகள், ஏற்றுக்கொள்ளவில்லை.

இதுகுறித்து பாதிக்கப்பட்டப் பயணி ஜான்பீட்டர் கூறுகையில், "சிறப்பு ரயில் காலை 6 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் காலை 5 மணிக்கே சென்றுவிட்டது. இதனால் அந்த ரயிலில் எங்களால் பயணிக்க முடியவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் எந்த பதிலும் சொல்லவில்லை. எங்களுக்கு ரயில்வே நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார்.

ரயில்வே வட்டாரங்கள் கூறுகையில், "ரயிலை தவறவிட்ட பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும். மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசித்து வருகிறோம்"என்றனர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close