Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'காவி மயத்தைத் திணிக்க நினைக்கும் பி.ஜே.பி யுக்தி பலிக்காது' - தி.க பொதுச் செயலாளர்

’தமிழகத்தில் காவி மயத்தை திணிக்க நினைக்கும் பா.ஜ.க-வின் யுக்திகள் பலிக்காது. எவ்வளவு சூழ்ச்சிகள் செய்தாலும் மதவாத கட்சியால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது’ தி.க பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகர் கூறினார்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கொங்குநாட்டார்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற ஒரு குடும்ப நிகழ்ச்சி மற்றும் பெரியாரியல் கருத்தரங்கம் ஒன்றில் தி.க மாநிலப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகர் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததால் எல்லாம் காவிமயமாகி வருகிறது. பெரியாரியல் அதை வெல்லக்கூடிய சூழ்நிலையில் இன்று உள்ளது. பல ஆபத்துகள் இருக்கும்போது பெரியார் கருத்துக்களை தேடி அவரது பிறந்தநாள் முதல் மக்கள் நம்மை நாடி வருகின்றனர். தற்பொழுது பெரியாரின் இந்த கொள்கை உலகலாவிய கொள்கையாக மாறிவருகிறது. இந்த கொள்கைதான் மக்களுக்கும் தேவைப்படுகிறது.  சமூக நீதியும், சமத்துவமும் கிடைப்பது பெரியாரின் கொள்கை மட்டுமே.

கும்பகோணத்தில் வருடத்திற்கு ஒருமுறை வருவது மகம், 12 ஆண்டுகளுக்கு பின் வருவது மகாமகம். ஆனால் நமது தலைமுறையில் யாருமே கண்டிராத மகாபுஷ்கரணி என்று ஒன்றை உருவாக்கி மயிலாடுதுறையில் நீராட வைத்தனர். அதுவும் நதிநீர் இல்லாமல் தண்ணீர் தொட்டிக்குள் நீரை விட்டு குளிக்க வைத்தனர், ஆனால் மத்திய அரசின் தூண்டுதலால் முதல்வரை வரவழைக்க காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு முதல்வர் நீராடினார். முதல்வர் வந்தபின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து குளித்து சென்றனர். ஆனால் அந்த நீரை மாற்றாமலே மீண்டும், மீண்டும் பொதுமக்கள் அந்த தண்ணீரில் குளித்ததால் சேரும், சகதியுமாகி பெரும்பாலான பொதுமக்களுக்கு வியாதிகள் வந்ததுதான் மிச்சம். தமிழகத்தில் எப்போது பா.ஜ.க கால் பதிக்கமுடியாது” என ஆவேசமாகப் பேசினார் துரை.சந்திரசேகர்.     

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close