Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

30 முகங்களுடன் பவனி வந்து சூரனை வதம்செய்த பிள்ளைக் காளியம்மன்!

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை இரவு 20-க்கும் மேற்பட்ட கோயில்களிலிருந்து சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வந்து மகர்நோன்பு பொட்டலில் வன்னிகா சூரனை வதம் செய்யும்  நிகழ்ச்சி நடைபெற்றது.
     

 பிள்ளை காளியம்மன்

 

ராமநாதபுரம் நகரில் உள்ள பல்வேறு கோயில்களில் நவராத்திரித் திருவிழா கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதித் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் அலங்காரமாகி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். தினசரி இரவு கோயில்களில் ஆன்மிகச் சொற்பொழிவு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக விஜயதசமித் திருநாளை முன்னிட்டு நகரில் உள்ள பல்வேறு கோயில்களிலும் இருந்து சுவாமி வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி மகர்நோன்பு பொட்டலுக்கு வரிசையாக வந்து சேர்ந்தனர்.

இதன் பின்னர், ராமநாதபுரம் அரண்மனையிலிருந்து அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மன் தங்கசிங்க வாகனத்தில் மகிசாசூர மர்த்தினியாக அலங்காரமாகி சிகில்ராஜவீதி வழியாக மகர்நோன்பு பொட்டலுக்கு வந்து சேர்ந்ததும் வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக அரண்மனையிலிருந்து தொடங்கிய ஊர்வலத்தில் ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி, ராமநாதபுரம் சமஸ்தானத்தின் திவான் வி.மகேந்திரன், செயல் அலுவலர் சி.சுவாமிநாதன், ராமநாதபுரம் அரிமா சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், தொழிலதிபர் வேலு மாணிக்கம் ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர். ராமநாதபுரம் முத்தால பரமேசுவரி அம்மன், ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலிலிருந்து முருகப் பெருமான், கோட்டை வாசல் விநாயகர் மகிசா சூர மர்த்தினி அலங்காரத்திலும் பிள்ளைக் காளியம்மன் 30 முகங்களுடனும் அலங்காரமாகி மகர்நோன்பு பொட்டலுக்கு வந்து வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close