Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘உளவுத்துறை ரெட் சிக்னல்..!’ சிவாஜி விழாவைப் புறக்கணித்த முதல்வர்

   சிவாஜி மணிமண்டப திறப்பு விழா

சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாததற்கு உளவுத்துறை கொடுத்த அறிக்கைத்தான் காரணம் என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.

நடிகர் சிவாஜி மணிமண்டப திறப்பு விழா நேற்று சென்னை அடையாறில் நடந்தது. விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கத் திட்டமிட்டிருந்தனர். அப்போது, விழாவுக்கு வரும் வி.வி.ஐ.பி.க்களின் பெயர் பட்டியல் உளவுத்துறை மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்குச் கொண்டு செல்லப்பட்டது. அந்த பட்டியலைப் பார்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விழாவை புறக்கணிக்க முடிவு செய்ததாக உள்விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள், “சிவாஜி சிலையை கடற்கரையிலிருந்து அ.தி.மு.க. ஆட்சியில்தான் அகற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவு என்றாலும் சில அரசியல் காரணங்களுக்காகத்தான் சிவாஜி சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது. இது, அ.தி.மு.க மீது சிவாஜி குடும்பத்தினர், ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி அடையாறில் மணி மண்டபம் அமைக்கப்பட்டது. அதில், கடற்கரையிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலை நிறுவப்பட்டுள்ளது.

மேலும், சிவாஜி சிலையை கருணாநிதி திறந்துவைத்தப்பிறகு அவருக்கு அடுத்தடுத்து சோதனை வந்ததாக தி.மு.க.வினர் தரப்பில் ஒரு பேச்சு உள்ளது. அந்த சென்டிமெண்ட் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அவரது நலம்விரும்பிகள் ஆலோசித்தனர். ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும் சிவாஜியின் பேத்திக்கும் திருமணம் நடந்தப்பிறகு மன்னார்குடி குடும்பத்தினருடன் சிவாஜி குடும்பத்தினர் நெருக்கமாக உள்ளனர். தற்போது, மன்னார்குடி குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் நேரத்தில் சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்பது சர்ச்சையை ஏற்படுத்தும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருதினார்.

   சிவாஜி மணிமண்டப திறப்பு விழா

அடுத்து, சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டோர் வரவுள்ளதாக உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருந்தது. ஏற்கெனவே இந்த அரசை கமல் விமர்சித்துவரும் நேரத்தில் ஒரே மேடையில் முதல்வரும் கமலும் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இருவரும் சந்தித்துப் பேச வேண்டிய சந்தர்ப்பமும் நேரிடும். இதனால், விழாவில் முதல்வர் பங்கேற்க வேண்டாம் என்று அவரது நலம்விரும்பிகள் தெரிவித்தனர். விழாவைப் புறக்கணிக்க சேலத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை காரணமாக்கிவிட்டனர்” என்றனர்.

உளவுத்துறை அதிகாரிகள் கொடுத்த ரெட் சிக்னலால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவை புறக்கணித்துவிட்டார். அந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். நடிகர்கள் ரஜினியும் கமலும் விழாவில் அரசியல் பேச... அதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர் ஓ.பன்னீர்செல்வமும் அமைச்சர்களும். ஒருக்கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அதிர்ஷ்டசாலி என்று ரஜினி சொல்ல.. அரங்கத்தையே அதிர வைத்துவிட்டனர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள். நடிகர் கமல், அரசியல் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ அரசியல் பேசாமல் சிவாஜியின் புகழைச் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். விழாவில் கருணாநிதியின் பெயரை ஓரத்திலாவது போடுங்கள் என்று நடிகர் பிரபு பேசியது, தி.மு.க.வினரை வருத்தமடையவைத்துள்ளதாம். 

 சிவாஜி மணிமண்டப திறப்பு விழா அரசியலாக்கப்பட்டுள்ளது!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close