Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் எடப்பாடி கனிவானவர், கருணாநிதி பெயரைப் பரிசீலிப்பார் - ஆர்.பி.உதயகுமார் 

காந்திஜெயந்தியை முன்னிட்டு இன்று காலை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காந்தி அமைதி ஓட்டம் நடந்தது. மாணவர்கள், பொதுமக்கள் அதிகமானோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஆர்பி.உதயகுமார்


''இன்னும் இரண்டு நாள்களே இந்த ஆட்சி நீடிக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே என்றதற்கு, ''அ.தி.மு.க என்பது ஒன்றரைக் கோடி தொண்டர்கள் கொண்ட கட்சி. இந்த மக்கள் இயக்கத்தை தி.மு.க-வின் தலைவர் கருணாநிதியாலேயே ஒன்றும் செய்ய முடியாதபோது  கத்துக்குட்டியான ஸ்டாலினால் தொட்டுகூட பார்க்க முடியாது. அவரால் எதுவுமே செய்ய முடியாது'' என்றவர், சிவாஜி கணேசனின் மணிமண்டபத் திறப்பு விழாவில், சிவாஜி கட்சிக்கு அப்பாற்பட்டவர் ஆகையால் கருணாநிதி பெயரை அங்கு இடம்பெறச் செய்ய வேண்டும் என்று பிரபு சொல்லியுள்ளாரே என்ற கேள்விக்கு, ''தற்போதைய தமிழக முதல்வர் மிகவும் கனிவானவர். அனைத்துக் கோரிக்கைகளையும் கனிவோடு ஏற்பார். கருணாநிதி பெயர் இடம் பெற வேண்டும் என்ற அனைவரின் கோரிக்கையைப் பரிசீலனை செய்து விரைவில் முடிவெடுப்பார்'' என்றார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close