Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர், ஔவையார் சிலைகளை நிறுவியவர் வித்யாசாகர் ராவ்' - வைகோ புகழாரம்

ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் மற்றும் ஔவையார் சிலைகளை நிறுவிய பெருமைக்குரியவர் வித்யாசாகர் ராவ் என்று  வைகோ தெரிவித்தார்.

வைக்கோ

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவியேற்றார். அதையடுத்து, தமிழ்நாட்டில் பல அரசியல் மாறுதல்கள் நடைபெற்ற போதிலும், நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழகத்தின் புதிய ஆளுநராகத் தற்போது அஸ்ஸாம் ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதனால், தமிழக பொறுப்பு ஆளுநருமான வித்யாசாகர் ராவ் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் செல்லவிருக்கிறார். இந்நிலையில், வைகோ இன்று மாலை நட்பு ரீதியாக நேரில் அவரை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசும்போது, 'வித்யாசாகர் ராவ் நடுநிலை தவறாமல் நேர்மையாக பணியாற்றினார். ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் மற்றும் ஔவையார் சிலைகளை நிறுவிய பெருமைக்குரியவர். பொதுமக்கள் ஆளுநர் மாளிகையைக் கண்டு களிப்பதற்கு அனுமதித்ததற்கான சிறப்பும் அவருக்கு உண்டு' என்று அவர் கூறினார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close