Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படகுகளை மீட்டு வர 3-வது குழு இன்று இலங்கை பயணம்!

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த  மூன்று படகுகளை மீட்க, 14 பேர் கொண்ட 3-வது மீனவர்கள் குழு இன்று காலை இலங்கை சென்றது.

எல்லை தாண்டியதாகக் கூறி, இலங்கைக் கடற்படை  தமிழக மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல்செய்து, அந்நாட்டில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் நிறுத்திவைத்துள்ளது. இந்நிலையில், படகுகளை விடுதலைசெய்யக்கூறி மத்திய, மாநில அரசுகளுக்கு  அழுத்தம்கொடுக்கும் விதமாக  மீனவர்கள் பல்வேறு  கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். இதையடுத்து, முதல் கட்டமாக 2015-ம் ஆண்டு சிறைப்பிடிக்கப்பட்ட ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 42 விசைப்படகுகளை மட்டும்  விடுதலைசெய்ய, கடந்த ஜூலை மாதம் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கை கடற்படையினால் சிறை பிடிக்கப்பட்டு கிடக்கும் படகுகள்

இதையடுத்து, விசைப்படகுகளை மீட்கவும் பார்வையிடுவதற்கும் கடந்த மாதம் 17 பேர் கொண்ட அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் கொண்ட  குழு இலங்கை சென்றது. 42 விசைப்படகுகளில், 10 விசைப்படகுகள்  ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவை.  இந்த  10 விசைப்படகுகளில் 3 விசைப்படகுகள் சேதமடைந்துள்ளதால், 7 விசைப்படகுகளை மட்டும் மீட்க அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த 27-ம் தேதி காலை, மண்டபம் வடக்குத் துறைமுகத்திலிருந்து 7 விசைப்படகுகளில் 53 பேர் கொண்ட மீனவர்கள் இலங்கை புறப்பட்டனர். இவர்கள், கடந்த இரண்டு நாள்களுக்கு முன் 6 படகுகளை மீட்டு ராமேஸ்வரம் கொண்டுவந்தனர். இதைத் தொடர்ந்து, அன்று காலை 2-வது கட்டமாக  மன்னாரில் உள்ள  8 படகுகளை மீட்க 72 பேர் கொண்ட மீனவர் குழு இலங்கை சென்றது. இதில் 4 படகுகள் கடலில் மூழ்கியதால், எஞ்சிய 4 படகுகளுடன் இன்று ராமேஸ்வரம் திரும்புகின்றனர்.

இந்நிலையில், இலங்கையின் காரை நகர்ப் பகுதியில் உள்ள 3 படகுகளை மீட்டு வர, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 14 பேரைக் கொண்ட 3-வது குழு, இன்று காலை மண்டபத்திலிருந்து இலங்கை சென்றுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close