Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன விலங்குகளின் உயிர்கள்!

அரியலூர் மாவட்டம் செந்துறை கிராமத்தில், அதிகாரிகளின் அலட்சியத்தால் மின்கம்பி அறுந்துவிழுந்து மாடுகள் இறந்த சம்பவம், அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

                                    

செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமம், நடுத்தெருவில் வசிப்பவர் சண்முகம். இவரது மனைவி சிவகாமி. இவர்கள் இரண்டு கறவை மாடுகள் வைத்து பால் கறந்து பிழைப்பு நடத்திவருகிறார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம், வழக்கம்போல மாடுகளை வீட்டின் அருகே கட்டிவைத்துவிட்டு உறங்கச் சென்றனர்.  அதிகாலை 4 மணியளவில் பால் கறப்பதற்காக சண்முகம் வந்துள்ளார். அப்போது, மின் கம்பி அறுந்து மாடுகள் இறந்துகிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் வந்து மின் கம்பியை யாரும் மிதிக்காதவாறு பார்த்துக்கொண்டனர். தொடர்ந்து, செந்துறை மின்வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த வி.ஏ.ஓ ராஜாமணி, செந்துறை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்இணைப்பைத் துண்டித்து, அறுந்துகிடந்த மின் கம்பியை அகற்றினர். பிறகு, ஊருக்கு வெளியே மாடுகளைக் கொண்டுசென்று, அரியலூர் கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, பரிசோதனைசெய்து அங்கேயே புதைத்தனர்.

மின்கம்பிகள் அறுந்துவிழும் நிலையில் உள்ளதாக ஊர் மக்களே பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பொது மக்கள் புகார் கொடுக்கும்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், மாடுகள் இறந்திருக்காது. ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் மாடுகள் இறந்துள்ளன என்று குற்றம் சாட்டினர். இதனால், தங்களுடைய வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டதாகக் கதறி அழத்தொடங்கினர், சண்முகமும் அவரது மனைவி சிவகாமியும். ''இதுபோன்ற விபத்துகள் நடக்காமலிருக்க, மாதந்தோறும் சோதனைசெய்து மராமத்துப் பணியை மேற்கொள்ள வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close