Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெங்கு காய்ச்சலுக்கு பயந்து குழந்தையுடன் உயிரை மாய்த்துக்கொண்ட தாய்!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சியில் தாய்க்கும், குழந்தைக்கும் 3 நாள்களாகக் காய்ச்சல் இருந்துள்ளது. பேளுக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அக்கம் பக்கத்தினர் உனக்கும், குழந்தைக்கும் டெங்கு அறிகுறி போலத் தெரிகிறது என்று கூறியிருக்கிறார்கள். இதற்கு பயந்த அந்த பெண், வீட்டின் அருகே இருந்த கிணற்றுக்குள் தன் குழந்தையை போட்டு விட்டு அவரும் கிணற்றில் விழுந்து இறந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேளுக்குறிச்சியில் இறந்து போன அந்தத் தாயின் உறவினர், ''நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சையைச் சேர்ந்தவர் பெரியசாமி சலவைத் தொழிலாளி. இவரது மனைவி பெயர் பூங்கொடி. இவர்களுக்கு 8 வயதில் சர்மிளா என்ற பெண் குழந்தை இருக்கிறது. சர்மிளா பிறந்து 7 ஆண்டுகள் கழித்து சர்வின் என்ற மகன் பிறந்தார். சர்வினுக்குத் தற்போது 7 மாதம் ஆகிறது.

இந்நிலையில் கடந்த 3 நாள்களாகப் பூங்கொடிக்கும், குழந்தை சர்வின்னுக்கும் தொடந்து காய்ச்சல் இருந்து வந்தது. பேளுக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று 3 நாள்களாக ஊசி போட்டுக் கொண்டு மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார். காய்ச்சல் குறையவே இல்லை. தொடந்து காய்ச்சல் இருந்துக் கொண்டே வந்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர், 'இங்கு வைத்தியம் பார்ப்பது வேஸ்ட். சேலத்திற்குச் சென்று பெரிய மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றால்தான் நீயும், உன் குழந்தையும் பிழைக்க முடியும். இல்லையென்றால் செத்து விடுவீர்கள்' என்று கூறியிருக்கிறார்கள்.

இதனால் மனம் உடைந்த பூங்கொடி பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பார்க்கும் அளவுக்கு வசதியில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார். இதனால் விரக்தியடைந்து இன்று அதிகாலை தன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குழந்தையைப் போட்டுவிட்டு பூங்கொடியும் கிணற்றில் குதித்துவிட்டார். குழந்தையும், தாயும் இறந்து விட்டார்கள். இதனால் பெரியசாமியும், அவருடைய 8 வயதுப் பெண் குழந்தை சர்மிளாவும் பேச முடியாத நிலையில் தவிக்கிறார்கள்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close