Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைப்பு சாரா தொழிலாளர் நலனுக்காக விழிப்புஉணர்வு பிரசாரப் பயணம்!

அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனை வலியுறுத்தி, குமரியில் தொடங்கிய விழிப்புஉணர்வு பிரசாரப் பயணம் நெல்லை வந்து சேர்ந்தது. தொழிலாளர்  குழுவினர் ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.
 

தொழிலாளர் சங்கம்

கட்டடத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், முடிதிருத்துவோர் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழில்களைச் செய்யும் தொழிலாளர்களுக்கு, அரசின் திட்டங்களைப் பெறுவது தொடர்பான விழிப்புஉணர்வு வாகனப் பேரணி குமரியில் 2-ம் தேதி தொடங்கியது. பல்வேறு நகரங்களின் வழியாக சென்னை வரை செல்லத் திட்டமிட்டுள்ள இந்தப் பிரசாரப் பயணக் குழுவினர், இன்று நெல்லை வந்துசேர்ந்தனர். 

இந்தக் குழுவினருக்கு, நெல்லையில் பல்வேறு தொழிற்சங்கங்களின் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள், நெல்லை ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர். அதில், ‘’மத்திய, மாநில அரசுகள் நிதிநிலை அறிக்கைகளின்போது, அமைப்புசாரா தொழிலாளர் நலநிதிக்காக 3 சதவிகிதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கான பணப் பலன்கள் அனைத்தையும் டெல்லியில் செய்யப்பட்டிருப்பது போல, தமிழக அரசும் அதிகப்படுத்த வேண்டும். தேங்கியுள்ள மனுக்கள் அனைத்தையும் உடனடியாக முடிவு எடுத்துப் பரிசீலனை செய்ய வேண்டும். மத்திய அரசின் சட்டத் திருத்தம் என்ற பெயரில் உரிமை மீறல்கள், தனியார் மயம் ஆகியவற்றை மேற்கொள்ளக்கூடாது’’ என்பது உள்ளிட்ட கோரி்க்கைகளை வலியுறுத்தினர். 

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு செய்துள்ள திட்டங்களைத் தொழிலாளர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், இந்த வாகன விழிப்புஉணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி, வரும் நவம்பர் 1-ம் தேதி சென்னையில் நிறைவுபெற உள்ளதாகப் பேரணியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். நெல்லையில், இந்தக் குழுவினரை சி.ஐ.டி.யூ சார்பாக மோகன், தொ.மு.ச சார்பாக தர்மன், ஹெச்.எம்.எஸ் சார்பாக சுப்பிரமணியன், ஏ.ஐ.சி.சி.டி.யூ சார்பாக கணேசன், ஏ.ஐ.டி.யு.சி சார்பாக காசிவிஸ்வநாதன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close