Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரட்டை இலை விவகாரத்தில் ஆவணம் தாக்கல்செய்ய கூடுதல் அவகாசம் கோரி தினகரன் மனுத்தாக்கல்!

 

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், டி.டி.வி.தினகரன் மனு ஒன்றை தாக்கல்செய்திருக்கிறார். அந்த மனுவில், 'இரட்டை இலை யாருக்கு என்பதுகுறித்து அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிவுசெய்ய வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை கிளை, கடந்த செப்டம்பர் 15-ம் தேதி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைப் பிறப்பிக்கும் முன்பு, என் தரப்பு வாதத்தையும் முன்னாள் அமைச்சர் செம்மலை தரப்பு வாதத்தையும் நீதிமன்றம் கேட்கவில்லை. சமாஜ்வாடி கட்சியின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு கண்டது போலவும், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலை கருத்தில் கொண்டும், அக்டோபர் 31-ம் தேதிக்குள் இரட்டை இலை யாருக்கு என்பதை முடிவுசெய்யத் தேர்தல் ஆணையத்துக்கு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதன்பிறகு, செப்டம்பர் 21-ல் தேர்தல் ஆணையம் அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும், செப்டம்பர் 29-க்குள் அனைத்து ஆவணங்களையும் தாக்கல்செய்ய வேண்டுமென நோட்டீஸ் அனுப்பினர். எங்கள் தரப்பிலான அனைத்து ஆவணங்களையும் நாங்கள் ஏற்கெனவே தாக்கல்செய்துவிட்டோம். 7 லட்சம் பக்கங்களைக்கொண்ட ஆவணம் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. மீண்டும் புதிதாக, கூடுதலாக ஆவணங்களைத் தாக்கல் செய்ய  மூன்று வாரகால அவகாசத்தை அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிய நிலையில், கடந்த செப்டம்பர் 28-ல் தேர்தல் ஆணையம் அதை நிராகரித்துவிட்டது. எனவே, எங்கள் தரப்பில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல்செய்யப் போதுமான கால அவகாசம் வழங்கவும், அதன் பின்னரே சின்னம்குறித்து முடிவு செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close