Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக வட மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த மழை!

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில், நேற்றிரவு முதல் கன மழை பெய்துவருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழையால் பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது.

சென்னையில் மழை


கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை பொய்த்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் வறட்சி காணப்பட்டது. இந்த வறட்சியின் காரணமாக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.  தென்மேற்குப் பருவ மழை இந்த ஆண்டு அதிகபட்சமாகப் பெய்துள்ளது என்றும் இது கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத மழை அளவு என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருந்தது. இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தின் மழை அளவு 41 சதவிகிதம். இது வழக்கத்தைவிட 29 சதவிகிதம் கூடுதல் ஆகும். இந்நிலையில், பருவ மழை  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்துவருகிறது. குறிப்பாக, வட மாவட்டங்களில் தொடர் கன மழை காரணமாக, அங்குள்ள நீர்நிலைகளில் நீரின் அளவு கணிசமாக உயர்ந்துவருகிறது. 

நள்ளிரவில் மழை
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close