Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குமரி மாவட்டத்தில் காந்தி ஜயந்தி அன்று மது விற்ற 16 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் காந்தி ஜயந்தி அன்று மது விற்றதாக 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, அக்டோபர் 2-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து அன்று திருட்டுத்தனமாக மது விற்பவர்களைப் பிடிக்க, மாவட்ட எஸ்.பி.துரையின் உத்தரவின்படி போலீஸார் சோதனை நடத்தினார்கள். இதில், கோட்டார் ஆசாரிபள்ளம், இரணியல் அருமனை, திருவட்டார்  எனப் பல்வேறு இடங்களில் திருட்டு மது விற்றதாக 16 பேரை போலீஸார் கைதுசெய்தனர். இவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

குமரி மாவட்டத்தில், சில இடங்களில் சட்டம்- ஒழுங்கு போலீஸாரின் துணையுடன் திருட்டு மதுவிற்பனை செய்யப்படுகிறது. திருட்டு மது விற்றவர்கள், அதிக விலைக்கு மது வகைகளை விற்பனை செய்துவந்தனர். நாகர்கோவில், தக்கலை மதுவிலக்கு போலீஸார் சோதனை நடத்தியதில், அதிகமாக டாஸ்மாக் பாரின் அருகில் திருட்டு மதுவிற்பனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருட்டு மது விற்பனை மூலம் ஒன்றுக்கு சுமார் 15,000 ரூபாய்க்கு மேல் சம்பாதித்தது தெரியவந்துள்ளது. திருட்டு மதுவை ஒழிக்க  தீவிர நடவடிக்கை எடுக்க எஸ்.பி துரை உத்தரவிட்டுள்ளார். இதனால் மதுவிலக்கு போலீஸார் திருட்டு மது விற்பவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். கைதுசெய்யப்பட்ட 16 பேரும் ஜாமீனில் வந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close