Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: விசாரணைக்கு வரும் வழக்கு

18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்தது தொடர்பான வழக்கு, இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

உச்ச நீதிமன்றம்

அ.தி.மு.க அணிகள் இணைப்புக்குப் பின்னர், ஆளுநரைச் சந்தித்த தினகரன் ஆதரவு நிலைப்பாடுகொண்ட 19 எம்.எல்.ஏ-க்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கடிதம் அளித்தனர். அவர்கள், தனித்தனியாக அளித்திருந்த கடிதத்தில், முதலமைச்சரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து, ஆளுநரைச் சந்தித்த 19 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்குப் பரிந்துரைசெய்தார். அந்தப் பரிந்துரையைத் தொடர்ந்து, ஆளுநரைச் சந்தித்தது தொடர்பாக விளக்கமளிக்குமாறு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். ஒரு எம்.எல்.ஏ, தினகரன் அணியிலிருந்து எடப்பாடி பழனிசாமியின் அணிக்கு மாறியதால் அவரை விடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்வதாகத் திடீரென உத்தரவு பிறப்பித்தார் சபாநாயகர்.

இதையடுத்து, தகுதிநீக்கம் செல்லாதென தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குடன் ஸ்டாலின் தொடுத்த வழக்கும் இணைக்கப்பட்டு விசாரிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது. ஸ்டாலின், சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுமீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள்குறித்த விசாரணை, இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close