Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவிரியில் அணை கட்டுவதற்கு முதல்வர் பழனிசாமி ஒப்புதல் அளிக்கக் காரணம் சொல்லும் தே.மு.தி.க!

செங்கல்பட்டில் தே.மு.தி.க சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தே.மு.தி.க மாநிலப் பொருளாளர் இளங்கோவன், ''கர்நாடகாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிலங்களை வாங்கிப் போட்டிருப்பதாலேயே, காவிரியின் குறுக்கே அணை கட்ட சம்மதிக்கிறார்'' எனப் பரபரப்புக் கிளப்பியுள்ளார்.

விழாவில் பேசிய காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் அனகை முருகேசன், “செங்கல்பட்டு பாலாற்றில் தண்ணீர் எடுத்து ஆலந்தூர் வரை கொண்டுசெல்கிறார்கள். ஆனால், பக்கத்தில் இருக்கும் செங்கல்பட்டுக்கு 10 நாளுக்கு ஒருமுறைதான் தண்ணீர் கிடைக்கிறது. செங்கல்பட்டு குடிநீர் பிரச்னைக்காக என்னுடைய சட்டமன்றத் தொகுதியின் நிதியிலிருந்து 25 லட்ச ரூபாயைக் கொடுத்தேன். செங்கல்பட்டு பகுதியில், ரேஷன் கடைகளை என்னுடைய தொகுதி நிதியில் கட்டிக்கொடுத்தேன். செங்கல்பட்டு நகரில், குப்பைப் பிரச்னை இன்னும் தீரவே இல்லை. இதனால் இந்தப் பகுதியில் டெங்கு காய்ச்சல் அதிகமாகிவிட்டது. இதற்கு, நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நகராட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம்'' என்றார்.

எடப்பாடி பழனிசாமி, அனகை முருகேசன்

அடுத்து பேசிய மாநில கழகப் பொருளாளர் இளங்கோவன், “குளத்தில் மாடு மூழ்குவதுபோல மூழ்கி, செய்த பாவத்துக்கெல்லாம் புண்ணியம் தேடுகிறார் எடப்பாடி பழனிசாமி. அவர், 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருந்த ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பழனிசாமி அமைச்சராக இருந்தபோது, அவர் குடும்பம் சம்பாதித்தைக் கணக்குப்போட்டால், எங்கேயோ போய் நிற்கிறது. எடப்பாடியின் மகனுடைய மாமனார் பெயரிலும் எடப்பாடியின் சித்தப்பா மகன் பெயரிலும் கர்நாடகாவில் பெருமளவு நிலத்தை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். அவர்கள், இன்றைக்கு ஜெயிலில் இருக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நான்கு வருடம் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று பல்வேறு குறுக்குவழிகளில் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ளவே அவருக்கு நேரம் போதவில்லை.

12 வருடங்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. நீதிமன்றத்தின் நகலை கெசட்டிலே பதிவுசெய்தும் தமிழகத்துக்கு இன்னும் தண்ணீர் வந்தபாடில்லை. காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் கட்டப்படும் நான்காவது அணைக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. இந்த அணையைக் கட்டினால்தான் தமிழகத்துக்குத் தண்ணீர் தரமுடியும் என்கிறார், கர்நாடக அரசு வழக்கறிஞர். தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுப்பதென்றால், நீங்கள் அணையைக் கட்டிக்கொள்ளுங்கள் என எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் சொல்கிறார். மாண்டியா போன்ற காவிரி நீர்ப்பாசனப் பகுதிகளில் 1,000 ஏக்கர் நிலத்தை வாங்கி விவசாயம் செய்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் விரைவில் ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி கொண்டுவரப்படும். ஒருவருடம் கழித்து 2019 நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும்” எனப் பரபரப்புக் கிளப்பினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close