Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தகுதிநீக்கம் குறித்த விசாரணை: சபாநாயகருக்கு நோட்டீஸ்!

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்யக் கோரியது தொடர்பான வழக்கு விசாரணையில், சபாநாயகருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனபால்

தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரின் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு விசாரணை, தற்போது உயர்நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. இந்த 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்கம் தொடர்பாக, தற்போது தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால், நீதிமன்றத்தில் பதிலளித்துவருகிறார். அப்போது சபாநாயகர் தனபால் கூறுகையில், “ஆட்சியைக் கவிழ்க்க தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் சதித் திட்டம் தீட்டினர்” எனப் பரபரப்பு புகார் ஒன்றைக் கூறியுள்ளார்.

மேலும், ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக தி.மு.க தொடர்ந்த வழக்கில், தமிழக சட்டசபையின் சபாநாயகர் தனபாலுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு, தி.மு.க கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்காகும். 

தற்போது, இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றிணைத்து, உயர் நீதிமன்றம் விசாரித்துவருகிறது. இந்த விசாரணையில், தற்போது நீதிபதி புதிய கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதாவது, தற்போதைய வழக்கு விசாரணையில் தி.மு.க தரப்பு வழக்கையும் தினகரன் தரப்பு வழக்கையும் ஒரே நேரத்தில் விசாரிக்க வேண்டுமா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இரண்டும் வெவ்வேறு விவகாரங்கள் எனக் குறிப்பிட்டு, இந்தக் கேள்வியை உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close