Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாக்கி டாக்கி டெண்டர் முறைகேடு! - டி.ஜி.பி-க்கு  நிரஞ்சன் மார்டி சரமாரிக் கேள்வி

தமிழக போலீஸுக்கு வாங்கப்பட்ட வாக்கி டாக்கி டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி தமிழக டி.ஜி.பி-க்கு விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பியுள்ளார். 

niranjan mardi
 

தமிழகக் காவல்துறையில் நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் தொலைத்தொடர்பு கருவிகள் வாங்கப்பட்டு வருகின்றன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ஆப்கோ வாக்கி டாக்கி வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதற்கு டி.ஜி.பி அலுவலக அதிகாரிகள் ரூ.88 கோடி மதிப்புள்ள டெண்டர் கோரினர். டெண்டரில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றது. அந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், டெண்டரில் பங்கேற்ற நிறுவனம்மீதும் டெண்டர் வழங்கிய அதிகாரிகள்மீதும் உள்துறை நிரஞ்சன் மார்டிக்குப் புகார்கள் சென்றன. அதையடுத்து உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி, தமிழக டி.ஜி.பி-யிடம் சரமாரியாகக் கேள்வியெழுப்பி கடிதம் எழுதியுள்ளார். டி.ஜி.பி இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

’டெண்டரில், ஒரே நிறுவனம் மட்டுமே பங்கேற்றால், அந்த நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கக் கூடாது என அரசு விதி உள்ள நிலையில், விதியை மீறி பெங்களூரைச் சேர்ந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது ஏன்?  இவ்வளவு பெரிய தொகையைப் போட்டியின்றி ஒரே நிறுவனத்துக்குக் கொடுப்பது குறித்து அரசின் பார்வைக்குக் கொண்டு வராதது ஏன்? தொலைத்தொடர்பு உரிமம் பெறாத நிறுவனத்திடம் வாக்கி டாக்கிக்கான டெண்டர் ஏன் கொடுக்கப்பட்டது? என நிரஞ்சன் மார்டி சரமாரியாகக் கேள்வியெழுப்பியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close