Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’போலீஸார் மீதே அதிக புகார்கள் வந்துள்ளன!’ - ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையர் தகவல்

கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன.

குறிப்பாக சென்னை மெரினா, மதுரை தமுக்கம், அலங்காநல்லூர், கோவை என முக்கிய நகரங்களில் பிரமாண்டமான போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டம் முடிவுக்கு வரும் நாளில், காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள், தங்கள்மீது தாக்குதல் நடத்தியதாகப்புகார் கூறினார்கள்.

ஜல்லிக்கட்டு

இந்தக் கலவரத்தில் பலரும் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். தமிழக அரசு, இதைப் பற்றி விசாரிக்க முன்னாள் நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது.

சென்னை, கோவையில் விசாரணை நடத்திய இந்த கமிஷன், இன்று முதல் மதுரையில் தங்கியிருந்து ஏற்கெனவே அபிடவிட் தாக்கல் செய்தவர்களிடம் விசாரணை நடத்துகிறது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய விசாரணை ஆணையர் ராஜேஷ்வரன், "இன்று ஐந்து மனுக்கள்மீது விசாரணை தொடங்குகிறது. நாளை 10 மனுக்கள்மீது விசாரணையும் நாளை மறுநாள் மற்ற மனுக்கள்மீது விசாரணையும்  நடத்தப்படும். இதுவரை ஐல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக 1951 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இன்னும் ஆறு மாதங்களில் இந்தப் பணி நிறைவுபெறும். போலீஸார் மீதே அதிக புகார் வந்துள்ளன. வருவாய்த்துறையினர் மீது இல்லை" எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close