Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இதுதொடர்பான விசாரணையை 3 மாதத்துக்குள் முடிக்கவும் விசாரணை ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில், தமிழக அரசு அமைத்த விசாரணை ஆணையத்தை ரத்து செய்யக் கோரி அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றிய பின்னரே ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைக்க முடியும். முதலமைச்சர் தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிக்க முடியாது. 

மேலும், விசாரணை ஆணையத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்கக் கோரிய வழக்கும் உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. அதேபோல், ஜெயலலிதா மரணத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தால் நேர்மையான விசாரணை நடக்காது. எனவே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணை நேர்மையாக நடக்காது என்ற மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close