Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நகைகள் மாயமான வழக்கு - இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் பதில்மனு கோரும் நீதிமன்றம்!

ராமநாதசுவாமி கோவில் நகைகள் மாயமானது தொடர்பான வழக்கில் இந்து அறநிலையத்துறை ஆணையர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

ராமேஸ்வரம் சிவராஜன் என்பவர் சென்னை  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த அம்மனுவில் " ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பர்வதவர்த்தினி அம்மனுக்கு உரிய வைரத் தாலி,  வைரமூக்குத்தி, வைர நெக்லஸ், வைர நெத்திச்சுவடி, கவசம் உள்ளிட்ட 12 விதமான விலை உயர்ந்த வைரம், வைடூர நகைகளைக் காணவில்லை. இந்த நகைகள் அனைத்தும்கோயிலில் இருப்பதாக 1972ம் ஆண்டின் கோயில் சொத்துப் பட்டியலிலுள்ள ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 1995-ம் ஆண்டின் பட்டியலில் இந்த நகைகள் இடம் பெறவில்லை. எனவே, கோயிலிலிருந்து விலை மதிக்க முடியாத நகைகள் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு இது குறித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close