Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

144 தடை உத்தரவை நீக்கக்கோரும் மனு; பரிசீலிக்க கலெக்டருக்கு நோட்டீஸ்!

சென்னை  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை மதுரையைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாளான அக்டோபர் 30 அன்று பலரும் பசும்பொன் சென்று வழிபடுவது வழக்கம். கடந்த பல ஆண்டுகளாக அக்டோபர் 30-ல் பல்வேறு சமூகத்தினரும் வாகனங்களில் சென்று வழிபட்டு வந்தனர். இந்நிலையில், வாடகை வாகனங்களில் செல்லக் கூடாது, சொந்த வாகனமாக இருப்பினும் 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது.

முந்தைய ஆண்டுகளில் தனிப்பட்ட நபர்களின் தவறுகளால் சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருந்தாலும், அதற்காகப் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது ஏற்கும்படி இல்லை. எனவே 144 தடை உத்தரவை நீக்கக் கோரி செப்டம்பர் 26-ல் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே, எனது மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமநாதபுரம் ஆட்சியருக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close