Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆசிரியரிடம் கேள்விகேட்டால் ரத்தம் வரும்வரை அடிப்பார்களா?- கொதிக்கும் பெற்றோர்கள்

ஆசிரியரை எதிர்த்துக் கேள்விகேட்டதால் மாணவனை ரத்தம் வரும் வரை அடித்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆசிரியரை எதிர்த்துப் பள்ளியை முற்றுகையிட இருக்கிறார்கள் பெற்றோர்கள் தரப்பினர்.

                   

அரியலூர் மாவட்டம் கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த வெற்றித்தமிழன், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளி வழக்கம் போல நடைபெற்று வந்தது. அப்போது வகுப்பறைக்கு வந்த தமிழ் ஆசிரியர் பொன்னிவளவன் வகுப்பறையில் வைத்திருந்த காலாண்டுத் தேர்வு வினாத் தாள்கள் காணவில்லை.

இதுகுறித்து மாணவர்களிடம் கேட்டு மாணவர்களை அடித்துள்ளார். அப்போது வெற்றித்தமிழன் நீங்கள் எங்கு பேப்பரை வைத்தீர்களோ அங்கு பாருங்க அதை விட்டுட்டு எங்களை அடித்தால் என்ன அர்த்தம் என்று சொல்லியிருக்கிறார். என்னையேவா எதிர்த்துப் பேசுறேனு சரமாரியாக அடித்திருக்கிறார். அதில் வெற்றித்தமிழனுக்குக் காலில் ரத்தம் கொட்டத் தொடங்கியது. பின்பு கால் வீக்கம் ஏற்பட்டு மயக்கம் வந்ததைத் தொடர்ந்து சக மாணவர்கள் வெற்றித்தமிழனை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  

இதையடுத்து மாணவன் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து அவனது பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர்கள், ஆசிரியரிடம் ’ஏன் அடித்தீர்கள்’ என்று கேட்டபோது, ’உங்க பையங்கிட்ட கேளுங்கள்’ என்று அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இச்சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியரைக் கண்டித்து பள்ளியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close