Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"வாழ்க்கையில் செந்தில்பாலாஜி பெறப்போவது கரும்புள்ளி என்கிற பேர்தான்!" கரூர் விழாவில் முதல்வர் அதிரடி பேச்சு!

'மற்ற மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா எதற்கு நடத்தப்பட்டதோ தெரியாது. ஆனால், கரூரில் நடத்திய விழாவின் நோக்கமே செந்தில்பாலாஜியை டேமேஜ் பண்ணதான்' என்று கமென்ட் அடித்தார் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முடிந்து ஊருக்குக் கிளம்பிய தொண்டர் ஒருவர். 


 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரை டி.டி.வி.தினகரன் அணியில் இருக்கும் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜியை வறுத்து எடுத்தார்கள். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செந்தில்பாலாஜியை எட்டப்பனாகவும், தன்னை ஊமைத்துரையாகவும் விளித்துப் பேச, அரங்கம் அதிர்ந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தன்பங்குக்கு,"செந்தில்பாலாஜி வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து மறையும்போது, மக்களிடம் அவருக்குக் கிடைக்கும் பட்டம் கரும்புள்ளி என்பது மட்டுமே. அவ்வளவு நயவஞ்சக எண்ணம் கொண்டவர்." என்று பேச, மறுபடியும் அரங்கம் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய அவர்,


  

"அரவக்குறிச்சி மறுதேர்தல் நடந்தப்ப என்னை இந்தத் தொகுதியின் பொறுப்பாளராக நியமித்தார்கள். அப்போது, இருபத்தைந்து நாள்கள் இங்கே தங்கி இருந்து, அவரது வெற்றிக்காகத் தேர்தல் பணியாற்றினேன். நான் இந்தத் தொகுதிக்கு அவருக்காக தேர்தல் பணியாற்ற வந்த முதல்நாளே கட்சியின் முக்கியப் புள்ளிகளே,  'அவரை ஜெயிக்க வைக்காதீர்கள். நம் கட்சியாக இருந்தாலும் அவர் தோற்பதே நல்லது. அவர் ஜெயித்தால், தனது சுயநலத்துக்காக எல்லோரையும் நயவஞ்சகத்தால் வீழ்த்திவிடுவார்'ன்னு சொன்னாங்க.

'என்னடா இப்படி சொல்றாங்களே?'ன்னு தோணுச்சு. தொடர்ந்து இருபத்தைந்து நாள்களும் தொகுதி முழுக்க ஓட்டு சேகரிக்கப் போனபோது, அங்குள்ள சாதாரண தொண்டன் தொடங்கி பொதுமக்கள் வரை எல்லோரும், 'செந்தில்பாலாஜியை ஜெயிக்க வைத்தீர்களானால், அதன் மோசமான பலனை பின்னாடி அனுபவிப்பீர்கள்'ன்னு சொன்னாங்க. அதிர்ச்சியாக இருந்தாலும், கட்சித் தலைமை இட்ட கட்டளையைச் செவ்வனே செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் அரும்பாடுபட்டு உழைத்து அவரை ஜெயிக்க வைத்தேன்.

ஆனால், மக்கள், தொண்டர்கள் சொன்னதின் அர்த்தத்தை இப்போதுதான் உணர்கிறேன். மனிதர்கள் பிறப்பார்கள். இறப்பார்கள். ஆனால், இடைப்பட்ட காலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை வைத்துதான் அவர்களின் இறப்பின்போது மக்கள் பேசுவார்கள். ஆனால், செந்தில்பாலாஜி அவரது வாழ்க்கை முழுவதும் முடியும் தருவாயில், மக்கள் அவரைக் கரும்புள்ளி என்றே சொல்வார்கள். அந்தளவு நயவஞ்சகம் கொண்டவர் அவர்" என்றார் அதிரடியாக.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close