Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவகாசியில் ஆபத்தை உணராமல் சட்ட விரோதப் பட்டாசு தயாரிப்பு! - கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

தீபாவளிக்கு இன்னும் 15 நாள்கள் உள்ள நிலையில் சிவகாசி பட்டாசு ஆலைகளில் பட்டாசு  தயாாிப்புப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், சிவகாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிலரின் சுயநலத்துக்காக,  கையில் குழந்தைகளை வைத்துக்கொண்டு பெண்கள் சிட்டுபுட்டு என்று சொல்லக்கூடிய சிறிய ரக பட்டாசுகளை ஆபத்தை உணராமல் சட்ட விரோதமாகத் தயாாிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  வருமானத்துக்காக இதை ஒரு வேலையாக  நினைத்துச் செய்தாலும், இதிலுள்ள ஆபத்தையும், அது தவறு என்பதையும் உணர்த்த வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற கிராமப்புறப் பெண்களை வைத்து சட்ட விரோதப் பட்டாசு தயாரிப்பவர்கள்மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

சிவகாசி

சிவகாசியைச் சுற்றியுள்ள கலைஞர் காலனி, விஜய காிசல்குளம், மீனாட்சிபுரம் போன்ற பகுதிகளில் தொடர்ந்து விதிகளைப் பின்பற்றாமல் பட்டாசு மற்றும் கருந்திாி போன்றவை தயார் செய்யப்பட்டு வருகிறது. இதெல்லாம் தெரிந்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள் அப்பகுதியினர். மாவட்ட நிா்வாகம் சார்பாக தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பாகவே குழு அமைத்து சோதனையில் ஈடுபட்டு, சட்டவிரோதப் பட்டாசு தயாாிப்பவா்கள்மீது நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால், தற்போது குழு அமைத்தும், அந்தக் குழு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இந்த வருடத்தில் மட்டும் சட்டவிரோதமாகப் பட்டாசு தயாாிக்கும்போது ஏற்பட்ட விபத்துகளில் பலர் பலியாகியுள்ளனர். ஆனால், இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக உள்ளது என்கிறார்கள் பொதுமக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close