Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெஜாரிட்டியை நிரூபித்தால் ஆட்சி தொடரும்: வானதி சீனிவாசன்

மதுரையில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பி.ஜே.பி-யின் தமிழக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'இந்த நாட்டிலுள்ள அனைவரின் ஒத்துழைப்பும் 'தூய்மை இந்தியா' திட்டத்தில் இருக்க வேண்டுமென பிரதமர் நினைக்கிறார். தூய்மை இருந்தால் டெங்கு இருக்காது. ஆகவேதான், 'தூய்மை இந்தியா' திட்டம் வலியுறுத்தப்படுகிறது. மத்திய அரசு, தமிழகத்தில் டெங்கு பாதிக்கப்படுள்ளவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்துள்ளது என்று சொல்லியுள்ளார், தமிழக அமைச்சர்.

வானதி

ஆனால், நோய் தீர்க்கவேண்டிய இடமே நோய் தாக்கக்கூடிய இடமாக உள்ளது. ஆகையால், தமிழக அரசு உடனடியாக டெங்குவைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்குவை  உடனே கட்டுப்படுத்த மருத்துகளால் முடியாது என நினைக்கிறேன். ஆனால், அதற்கு சரியான  மருந்தைக் கண்டுபிடிக்க மத்திய அரசு முயற்சி எடுத்துவருகிறது.

திறந்தவெளியில் மலம் கழித்தல் நோய்களுக்குக் காரணமாகும் என்பதால், கழிப்பறை கட்ட மத்திய அரசு மானியம் வழங்கிவருகிறது. மாநில அரசாங்கம், மத்திய அரசாங்கத்தைத் தொடர்புகொண்டு டெங்குவுக்கான உதவியைக் கேட்டுள்ளதா என்பது எனக்கு தெரியவில்லை. கேட்டார்களா என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும்' என்றவரிடம், 'தமிழக அரசு நீடிக்குமா?' என்று கேட்டதற்கு, 'தமிழக அரசு, தன் மெஜாரிட்டியை நிரூபித்தால் ஆட்சி தொடரப்போகிறது. இதில் எனக்கு ஆரூடம் சொல்லத் தெரியாது' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close