Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாகர்கோவில் நகராட்சி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த புளியடி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர், நாகர்கோவில் நகராட்சியில் குடிநீர் வாரியத்தில்  ஒட்டுநராகப் பணிபுரிந்துவருகிறார். மேலதிகாரி ரசல்ராஜ் என்பவர், அடிக்கடி அதிக வேலை கொடுத்துள்ளாராம். அதனால் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார். மேலும், அங்கு பணிபுரியும் முருகேசன், கிஷோர் ஆகிய இருவரும் மன அழுத்தம் வரும்படிப் பேசினார்களாம். இதுகுறித்து, வடசேரி காவல் நிலையத்தில் கடந்த 30-ம் தேதி ஐயப்பன் புகார் கொடுத்துள்ளார்.

இதுவரை காவல்துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஐயப்பன் நகராட்சி அலுவலகம் சென்று, வழக்கம்போல தனது வாகனத்தை எடுத்துள்ளார். அப்போது அதிகாரி, அனைத்து ஊழியர்கள் முன்னிலையிலும் ஐயப்பனை ஜாதிப் பெயரைச் சொல்லித் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனவேதனையுடன் வீடு திரும்பிய ஐயப்பன், வீட்டை பூட்டிவிட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பொதுமக்களும் உறவினர்களும் அவரை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு ஊழியரை மேலதிகாரி ஒருவர் ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டிய சம்பவம், நகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close