Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெகத்ரட்சகன் மருத்துவக் கல்லூரியில் மாணவி சுகன்யாவுக்கு மீண்டும் இடம்! #Impact

தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரியில், மாணவி சுகன்யாவுக்கு மருத்துவம் படிக்க மீண்டும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ மாணவி சுகன்யா

கோவையைச் சேர்ந்த மாணவி சுகன்யா, குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்துவந்தார். இதற்காக,  சுகன்யாவின் தந்தை 20 ஏக்கர் நிலத்தை விற்று, ரூ.45 லட்சம் கட்டியிருந்தார். இரண்டரை ஆண்டுகள் படித்துவந்த நிலையில், மாணவியின் தந்தை பாஸ்கரன் திடீரென்று இறந்துபோக, நிலைகுலைந்த மாணவியின் குடும்பத்தால் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. இதனால், கல்லூரி நிர்வாகம் அவரைத் தொடர்ந்து படிக்க அனுமதிக்கவில்லை. விடுதியிலிருந்தும் மாணவி வெளியேற்றப்பட்டார். 

மாணவியின் நிலைகுறித்து விகடன் இணையதளம் உள்ளிட்ட  மீடியாக்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, மாணவி சுகன்யாவை நேரில் அழைத்த கல்லூரித் தாளாளர் ஜெகத்ரட்சகன், அவரை மீண்டும் படிப்பைத் தொடர அனுமதித்தார். இனிவரும் ஆண்டுகளுக்கு கல்விக் கட்டணத்தையும் செலுத்த வேண்டாம் என ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.  மாணவி சுகன்யா மற்றும் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கல்லூரித் தாளாளர்  ஜெகத்ரட்சகனுக்கும்  உதவியவர்களுக்கும் மாணவி சுகன்யா நன்றி தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close