Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சார்ஜ் போட்டபடி வாட்ஸ்அப்பில் வீடியோ பார்த்த மாணவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு!

மொபைலை சார்ஜ் போட்டபடி வாட்ஸ்அப்பில் வீடியோ பார்த்த செங்குன்றம் மாணவர், மின்னல் தாக்கி உயிரிழந்தார். 


சென்னையை அடுத்த செங்குன்றம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த சித்திரைவேலின் மகன் ரஞ்சித், திருப்பாச்சூர் அருகே உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்துவருகிறார். செங்குன்றம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் மொபைலை சார்ஜ் போட்டபடியே ரஞ்சித் வாட்ஸ்அப்பில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது மின்னல் தாக்கியதில், ரஞ்சித் மயக்கமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உடனடியாக அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மின்னல் தாக்கத்தால் ஏற்பட்ட கதிர்வீச்சு காரணமாக, ரஞ்சித் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, சோழவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close