Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் விஸ்வரூபம்! போலி ஆவணங்கள் தயாரித்ததாக தனுஷ் மீது புகார்!

''போலி ஆவணங்களை தனுஷ் தயார்செய்துள்ளார்'' என மேலூரைச் சேர்ந்த கதிரேசன் என்பவர், மதுரை புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கதிரேசன்

மதுரை மேலூரை அடுத்த எம்.மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி என்ற தம்பதியரின் மகன் கலைச்செல்வன் 11-ம் வகுப்பு படிக்கும்போது காணாமல் போனதாகவும், நடிகர் தனுஷ்தான் கலைச்செல்வன் என்றும் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தனர் . அதன் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், கதிரேசன்- மீனாட்சி தம்பதியினரின் வழக்கை எதிர்த்து  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. அந்த வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டு, மேலூரில் தனுஷ் மீது தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடிசெய்யப்பட்டது .

இந்நிலையில், கதிரேசன்  உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நடிகர் தனுஷ் பிறப்புச் சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றைப் போலியாகத் தயார்செய்து தாக்கல்செய்துள்ளார். எனவே, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை புதூர் காவல் நிலையத்தில் கதிரேசன் புகார் அளித்துள்ளார். மேலும், மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளிக்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close