Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏலம் விடப்படும் கார்த்தியின் ஓவியம்!

Chennai: 

நடிகை சமந்தா சினிமாவில் நடிப்பதோடு, `ப்ரத்யுஷா சப்போர்ட்' என்கிற தொண்டு நிறுவனம்மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் செய்துவருகிறார். சமீபத்தில், `பாகுபலி-2' படத்தை அந்த அமைப்பிலிருக்கும் குழந்தைகளோடு பார்த்தது குறிப்பிடத்தக்கது.

சமந்தா

நாக சைதன்யா உடன் விரைவில் நடக்கவிருக்கும் திருமண வேலைகளுக்கு நடுவே, ப்ரத்யுஷா தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார் சமந்தா. மருத்துவம் மற்றும் கல்வி தொடர்பான உதவிகளை ப்ரத்யுஷா அமைப்பு மூலம் செய்துவரும் சமந்தா, நலத் திட்டங்களுக்காக நிதி திரட்டும் பொருட்டு, சினிமா பிரபலங்கள் பயன்படுத்திய சில பொருள்களை ஏலத்தில் விற்பனைசெய்து, அதன்மூலம் வரும் பணத்தை அமைப்புக்குப் பயன்படுத்த முடிவுசெய்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். இதற்காக, பிரபலங்கள் சிலரிடமிருந்து பெற்ற பொருள்களையும் அதன் ஆரம்ப ஏலத் தொகையையும் ப்ரத்யுஷா தளத்தில் அறிவித்திருக்கிறார். இதில், `தோழா' படத்தில் கார்த்தி வரைந்த ஓவியம் - 40,000 ரூபாய், இயக்குநர் த்ரிவிக்ரம் பயன்படுத்திய பேனா - 40,000 ரூபாய், `கப்பர் சிங்' படத்தில் பவன் கல்யாண் பயன்படுத்திய ஷூ - 30,000 ரூபாய், `தூக்குடு' படத்தில் மகேஷ் பாபு அணிந்த சட்டை - 15,000 ரூபாய், `24' படத்தில் சூர்யா அணிந்த உடை 20,000 ரூபாய், `அ ஆ' படத்தில் சமந்தா அணிந்த உடை 20,000 ரூபாய் ஆகியவற்றைப் பட்டியலிட்டிருக்கிறார். இந்த ஏலத்தின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close