Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’டெங்கு கொசு வளர இடமளிப்போருக்கு 6 மாதம் சிறை!’ - இது ராமநாதபுரம் எச்சரிக்கை

டெங்கு பரப்பும் வகையில் கொசு புழுக்கள் உற்பத்திசெய்ய ஏதுவாக, தண்ணீரை மூடி வைக்காமல் பாதுகாப்பின்றி வைத்திருக்கும் நபர்கள் மீது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

டெங்கு கொசு மூலம் பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்த மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்



தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பால் ஏற்படும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. இதைக் கட்டுப்படுத்த, மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டும் பாதிப்புகள் குறைவதாகத் தெரியவில்லை. இதையடுத்து, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரத்தில் தனியார் பள்ளி மாணவர்களுக்கான டெங்கு குறித்த விழிப்புஉணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் நடராஜன் துவக்கிவைத்தார். இதில் பங்கேற்ற 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, நிலவேம்புக்  கஷாயம் வழங்கப்பட்டது. 

மேலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர், இணை இயக்குநர், நகராட்சித் துப்பரவு ஆய்வாளர்  உள்ளிட்டோர், அரசு மருத்துவமனை மற்றும் சிங்காரத் தோப்பு பகுதியில், டெங்கு தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, தண்ணீரைத் தேக்கிவைத்து அதில் கொசு உற்பத்தியாவதைக்  கண்டறிந்தனர். இதையடுத்து, தண்ணீரைத் தேக்கிவைத்திருந்தவர்களுக்கு தலா ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், டெங்கு கொசு புழுக்களை உற்பத்திசெய்யும் வகையில் தண்ணீரைப் பாதுகாப்பற்ற முறையில் தேக்கிவைத்திருப்போர் மீது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் அபராதமும், 6 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close